நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Sunday 16 February 2014

நவபாஷாணம்

பாஷாணம்

பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். பாஷாணத்தில் 64 வகையுண்டு. 64 பாஷாணத்தில் நீலி என்பது ஒரு பாஷாணம்.இந்த நீலி எனும் பாஷாணம் 63 பாஷாணங்களின் விஷத்தன்மை முறிக்கக்கூடியது. நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் கண்ட விதி முறைகளை உபயோகித்துக் கட்டுவதாகும்.

நவ (ஒன்பது) பாஷாணம்

நவ பாஷாணம் என்பது சித்தர் மரபறிவியலாகும் நவபாஷாணம் கட்டுவது என்பது ஒரு சித்தர் வேதியியல் முறையில் வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக்கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்குவதே சித்தர்களின் வேதியியல் ஆகும். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களைக் கொண்டது. அவை:
எண்பாஷாணம் (அ) விஷம்
1சாதிலிங்கம்.
2மனோசிலை
3காந்தம்
4காரம்
5கந்தகம்
6பூரம்
7வெள்ளை பாஷாணம்
8கௌரி பாஷாணம்
9தொட்டி பாஷாணம்
"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர்
அதற்கான நவீன வேதியல் விளக்கம்.
கௌரிப் பாஷாணம்: Arsenic Penta sulphite (Arsenic pentasulfide is an inorganic compound contains arsenic and sulfur with the formula. The identity of this reddish solid remains uncertain. Solids of the approximate formula As2S5 have been used as pigments and chemical intermediates but are generally only of interest in academic laboratories, Arsenic and many of its compounds are especially potent poisons. Many water supplies close to mines are contaminated by these poisons. Arsenic disrupts ATP production through several mechanisms.)
கெந்தகப் பாஷாணம்: Sulfur (Elemental sulfur is non-toxic, but it can burn, producing sulfur dioxide. Although sulfur dioxide is sufficiently safe to be used as a additive in small amounts, at high concentrations it harms the lungs, eyes or other tissues. In organisms without lungs such as insects or plants, it otherwise prevents respiration. Sulfur trioxide and sulfuric acid are similarly highly corrosive, due to the strong acids that form on contact with water)
சீலைப் பாஷாணம்: Arsenic Di sulphite
வீரப் பாஷாணம்: Mercuric Chloride
கச்சாலப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
வெள்ளைப் பாஷாணம்: Arcenic Tri Oxide
தொட்டிப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
சூதப் பாஷாணம்: Mercury
சங்குப் பாஷாணம்: சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை+

சித்தர் வேதியியல்

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாகக ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்), ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன.
சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர். எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும். புடம்போடுவது என்பது சித்தர்களின் மற்றொரு வேதியியல் பிரிவு எனலாம்.
சித்த மருந்துக் கட்டு ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் இது;
புடத்தின் பெயர் எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
எண்புடத்தின் பெயர்எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
1காடைப் புடம்1
2கவுதாரிப் புடம்3
3குக்குடப் புடம்10 (அ) 8
4வராக புடம்50
5கஜம் (அ) யானை புடம்500 (அ) 1000
6கன புடம்700 (அ) 800
7மணல் மறைவுப் புடம்800
8கோபுடம்1000
நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை: வரிசை எண் புடம் பெயர் பயன்படும் பொருள்.
எண்புடம் பெயர்பயன்படும் பொருள்
1கோபுர புடம்மணல்
2பாணிடப் புடம்தண்ணீர்
3உமிப் புடம்உமி
4தானியப் புடம்நெல்
5சூரியப் புடம்வெயில்
6சந்திரப் புடம்நிலவொளி
7பருவப் புடம்பௌர்ணமி நிலவு
8இருள் புடம்அமாவாசை இரவு
9பனிப்புடம்பனி
10பட்டைப் புடம்மரத்தூள்
11நிழற்புடம்சூரிய ஒளி படாத அறை

நவ பாஷாணக் கட்டு

நவ பாஷாணக் கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது எனலாம். ஏனென்றால் நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டுள்ளதாம். மேலும் பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துகிறதாம். நவ பாஷாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வசசிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகிறது என்று சித்தர்கள் நம்பினார்கள்.

போகர் சித்தர்

போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றுத் துறை போகியவர். இவர் சித்தத்தை அடக்கியதால் மட்டும் சித்தர் அல்ல, இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர் இவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் என்று அறியப்படுகிறார்.
இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும், ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. நவ பாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார் என்பது உறுதி செய்ய இயலாத செவிவழி செய்தியாகும். அவை உள்ள இடங்கள்
  • பழனி தண்டாயுதபாணி (முருகன்) கோவில், திண்டுக்கல் மாவட்டம் .
  • குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் கோவில், பூம்பாறை, கொடைக்கான‌ல், திண்டுக்கல் மாவட்டம். கொடைம‌லைச‌ரிவில்,பூம்பாறையில் உள்ள இக்கோவில் மிக‌ப்ப‌ழ‌மை வாய்ந்த‌து என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும், சமண கால சிலை அழகும் சான்று.
  • மூன்றாவது சிலை யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. .
போகர் மூன்று நவ பாஷாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருஷ நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். சதுரகிரி மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாஷாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஆனால் இத்தகவலை உறுதி செய்யும்படி சித்தர் பாடலோ அல்லது வேறு ஆதாரமோ கிடைக்கவில்லை.
ப‌ழ‌னி ம‌லைக்கோவிலின் தென்மேற்கு திசையில் உள்ளது “போகரின் ஜீவ சமாதி” இங்கு அவ‌ர் பூசித்த‌ “புவ‌னேசுவ‌ரி அம்ம‌ன் சிலையும், ம‌ர‌க‌த‌ லிங்க‌மும் இன்றும் பூசையில் உள்ளது இந்த‌ ச‌ன்னிதியில் இருந்து முருக‌னின் திருவ‌டி நிலைக்கு உள்ள சுர‌ங்க‌ பாதையில் சென்ற‌ போகர் திரும்ப‌வில்லை.






No comments:

Post a Comment

கருத்துக்கள்