நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Monday 10 February 2014

இந்தியாவின் கேவலமான உண்மைகள்

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ. 80 லட்சம் கோடி! அதாவது ரூ.1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதோ அந்த ஊழலில் சில ‘துளிகளை’ இங்கே பார்க்கலாம்:
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல்:
ஆண்ட வர்க்கமும், ஆளுகின்ற வர்க்கமும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல். சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி திட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகையோ சுமார் 1.80 லட்சம் கோடி. நாடாளுமன்றத்தை சில நாட்கள் முடக்கி வைத்தார்கள். பின்னர் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது இந்த ஊழல்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:
ரூ. 1.76 லட்சம் கோடி: இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமென்ட் இது:
‘இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு’ (‘ஜிலீமீ sஜீமீநீtக்ஷீuனீ sநீணீனீ லீணீs ஜீut ‘ணீறீறீ ஷீtலீமீக்ஷீ sநீணீனீs tஷீ sலீணீனீமீ!’.)
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி:
இவ்வளவுதான் ஊழல் நடந்தது? என்று இன்னும் கூட உறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!. இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது. இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்தார். பின் பிணையில் வெளியே வந்து அதே ராஜபோகத்தில் உள்ளார்.
ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் தொகை ரூ. 14 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி.எல்.ஐ.சி. மற்றும் வங்கித் துறை கடன் ஊழல்:
மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!. மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. காரணம் இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான். இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. வங்கித் துறை&எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ. 1 லட்சம் கோடி இருக்கலாம் என்று குத்துமதிப்பாக கூறுகிறது மத்திய புலனாய்வுத் துறை.
பங்குச் சந்தை (ஹர்ஷத் மேத்தா) ஊழல்:
லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் 5ஆயிரம் கோடி ஊழல் ‘ஜுஜுபி’தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்று கூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.
ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி):
ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ. 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி. பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ. 40 ஆயிரம் கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம்:
இந்திய வி.வி.ஐ.பி.க்களில் ஏராளமானோர் தங்கள் பணத்தை மிகவும் பாதுகாப்பாக இருக்கட்டும் என்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள தொகையின் உத்தேச மதிப்புதான் ரூ.21 லட்சம் கோடி. இது குறைந்தபட்ச மதிப்புதான். கட்சி பாகுபாடு இல்லாமல் பணம் பதுக்கியுள்ளவர்கள் அநேகம் பேர். கேதன் மேத்தா: ஹர்ஷத் மேத்தா தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ.1000 கோடி.
உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி ஊழல்:
உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ. 2 ஆயிரத்து 300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ.300 கோடி, யூரியா ஊழல் ரூ. 133 கோடி மற்றும் பீகார் மாட்டுத்தீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு, ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).
ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல்:
பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. ஊழல் செய்யப்பட்ட தொகை ரூ. 19 ஆயிரம் கோடி. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ.5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ. 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ. 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ.1500 கோடி, எஸ்.என்.ஸி. லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ. 374 கோடி என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழ்ந்தது 1997.இவை தவிர கார்க்கில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்யும் சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், போலி ஆயுதபேர ஊழல், ஆதர்ஷ் கட்டட ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல்… என திரும்பும் திசையெல்லாம் ஊழல். இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, “இது எப்போ நடந்தது?” என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

No comments:

Post a Comment

கருத்துக்கள்